நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், 2021 ஒக்டோபர் முதலாம் திகதி சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்தார்.
நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு இன்று கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், ஊடகங்களிடம் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ தற்போதைய நிலையில் நாடு சாதகமான பக்கத்திற்கு திரும்பியுள்ளது. தடுப்பூசி செலுத்தும் நாடுகளின் வரிசையில் நாம் முன்னேற்றமடைந்துள்ளோம். தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
எனவே, முதலாம் திகதி ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். இது தொடர்பில் 30 ஆம் திகதி இறுதி முடிவு எட்டப்படும். நாடு திறக்கப்பட்டாலும் சுகாதார நடைமுறைகள், கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.” -என்றார்.