2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நவம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவாலேயே பாதீடு இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டு, திட்டங்கள் அறிவிக்கப்படும்.
அதன்பின்னர் பாதீடுமீதான விவாதம் ஆரம்பமாகும். டிசம்பர் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.
பாராளுமன்றத் ஒக்டோபர் 4ஆம் திகதி கூடும்போது ஒக்கீட்டு சட்டமூலமும் முன்வைக்கப்படவுள்ளது.

அதேவேளை, பஸில் ராஜபக்சவால் முன்வைக்கப்படும் பாதீட்டை, அலாவுதீனின் அற்புத விளக்கு என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வர்ணித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
