வெள்ளரிக்காயில் இவ்வளவு நன்மையா?

சருமத்திற்கு ஈரப்பதம்

வெள்ளரிக்காய் 96 சதவீதம் நீரைக் கொண்டிருக்கிறது. வெள்ளரிக்காயை உட்கொள்வதால் முகத்திற்கு மாய்ஸ்சரைஸ்ரே தேவையில்லை. அதுவே சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சிகளின்றி பராமரிக்கும்.

ஜொலிக்கும் சருமம்

முகத்தில் வடியும் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சருமத் துளைகள் சுவாசம் பெற்று புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.

நிறத்தைப் பாதுகாக்கும் : சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்தின் நிறத்தை சீராக்குகிறது. சருமத்தில் ஏற்படும் தோல் அலர்ஜி போன்றவற்றை நீக்கி தெளிவாக்குகிறது.

கருவலையம் நீங்கும்

பார்லர்களின் ஃபேஷியல் மாஸ்க் அப்ளை செய்யும் போது வெள்ளரிக்காய் வைப்பதன் காரணம் இதுதான். கண்கள் சோர்வாகவும், கருவலையத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வெள்ளரிக்காய் அதை நீக்கி விடும்.

இளமை நீடிக்கும்

முகச் சுருக்கம், சுருக்கக் கோடுகள் ஏற்படும் அறிகுறிகள் இருந்தால் உடனே வெள்ளரிக்காயை அரைத்து வாரம் 3 முறை முகத்தில் பூசி வாருங்கள். முகம் இளமையை திரும்பப் பெற்றுவிடும்.

நீளமான முடி

நீளமான முடிகளைப் பெறவும் வெள்ளரி உதவும். வாரம் இரண்டு முறை வெள்ளரி ஜூஸ் அருந்துவதால் முடி கருகருவென நீளமாக வளரும்.

பளபளக்கும் கூந்தல் : முடி வளர்ச்சிக்கு மட்டுமல்ல மென்மையான ஷைனி தோற்றத்தைப் பெறவும் வெள்ளரிக்காய் உதவும்.

Related Articles

Latest Articles