இன்று மாலை 6.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அரசாங்கத்தின் விசேட குழு கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசாங்க உறுப்பினர்களையும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது உர நெருக்கடி, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், வரவு செலவு திட்டம் மற்றும் பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.