ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின், 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் (22) மாலை இடம்பெறவுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் கடந்த 12 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மறுநாள் (13) முதல் இரண்டாம்வாசிப்புமீதான விவாதம் ஆரம்பமானது. இதற்காக 7 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அதன் தோழமைக்கட்சிகளும் பாதீட்டை ஆதரித்து வாக்களிக்கவுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என்பன எதிர்த்து வாக்களிக்கவுள்ளன.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் முடிவு நாளை அறிவிக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடும் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது.










