தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் காய்காறிகளின் குறைந்துள்ளதாக அதன் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நேற்று நான்கரை லட்சம் கிலோ கிராம் காய்கறிக்கள் மாத்திரமே கிடைத்துள்ளன.
இது சாதாரணமாக சந்தைக்கு கிடைக்கும் தொகையை விட 80 வீதம் குறைவான காய்கறி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு தினமும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோ கிராம் காய்கறிகள் கிடைப்பதுண்டு.
பசளை பிரச்சினை மற்றும் கன மழையுடன் கூடிய காலநிலை காரணமாக காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக உழவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் காய்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது
