பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அழுத்தம் ஜனவாியில் குறைவடையும் – கப்ரால்

எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறைவடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் வரை இந்த அழுத்தம் அதிகபட்சமாக இருக்கும் எனவும் அதன் பின்னர் படிப்படியாக குறையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலாத்துறையில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (24) மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles