இறக்குமதி செய்த தேயிலையை பொலிஸார், போதைப் பொருள் என்று நம்பியதால் மலேசியாவைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் இருவரும் அவுஸ்திரேலியாவில் நான்கு மாதம் சிறை தண்டனை அனுபவித்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் தாயும், மகளும் இழப்பீடுகோரி அவுஸ்திரேலிய நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.
வுன் புய் மற்றும் அவரது மகள் சான் யன் இருவரும் மாதவிடாய் வலிக்கு தீர்வாக நம்பப்படும், மலேசியாவில் பிரபலமான தேயிலையை அவுஸ்திரேலியாவில் விற்பதற்கு தருவித்துள்ளனர்.
எனினும் தென் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள அவர்களது வீட்டை பொலிஸார் கடந்த ஜனவரியில் சுற்றிவளைத்தபோது இந்த தேயிலை பைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை ஆம்பெடமைன் போதைப் பொருள் என்று பொலிஸார் தவறுதலான அடையாளம் கண்டிருப்பதாக ‘வைஸ்’ சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
போதைப்பொருளை அடையாளம் காணும் சோதனைமுறையில் துல்லிய முடிவுகள் கிடைக்கவில்லை என்று அண்மையில் நடைபெற்ற விசாரணையில் கூறப்பட்டது.