பேலியகொடை மெனிங் சந்தை பழ விற்பனையாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்

பேலியகொடை மெனிங் சந்தை கட்டடத் தொகுதியில் மரக்கறி வர்த்தகர்கள் பழ விற்பனையில் ஈடுபடுவதன் காரணமாக அங்குள்ள பழ விற்பனை வியாபாரிகள் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

பேலியகொடை மெனிங் சந்தையின் முதலாம் மாடி கடைத் தொகுதிகள் மரக்கறி வர்த்தகர்களுக்கும், மேல் மாடியின் வர்த்தக நிலையங்கள் பழ வியாபாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், மரக்கறி வர்த்தகர்கள் அதனை மாத்திரம் விற்பனை செய்யாது கூடவே பழங்களையும் விற்பனை செய்கின்றனர்.

இதன்காரணமாக நுகர்வோர் மேல்மாடியில் உள்ள பழ வியாபார நிலையங்களுக்கு பிரவேசிப்பதில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பழ விற்பனை வியாபாரிகள் கோரியுள்ளனர்.

Related Articles

Latest Articles