சீன ஜனாதிபதிக்காக புதிய கொரோனாவின் பெயரை மாற்றிய WHO

தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிய கொரோனா திரிபுக்கு கிரேக்க அகர வரிசையின் இரண்டு எழுத்துகளை தவிர்த்து உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியுள்ளது.

புதிய கொரோனா திரிபுகளின் நீண்ட விஞ்ஞான பெயர்களுக்கு மாற்றாகவே கிரேக்க எழுத்துகள் பெயராக சூட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஏற்கனவே 12 கிரேக்க எழுத்துகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் அதிக மரபணு பிறழ்வுகளுடனான புதிய வைரஸ் திரிபுக்கு அகர வரிசையில் அடுத்து உள்ள நூ அல்லது ஷி என்ற பெயர்களை தவிர்த்திருக்கும் உலக சுகாதார அமைப்பு அதற்கு ஒமிக்ரோன் என்று பெயர் சூட்டியுள்ளது.

இதில் நூ என்ற பெயர் ‘நியூ’ என்ற ஆங்கிலச் சொல்லுடன் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்று குறிப்பிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பு ஷி என்ற பெயர் சீனா ஜனாதிபதியின் பெயர் என்பதோடு அது பொதுவான குடும்பப் பெயராக பயன்படுத்தப்படுவதால் அந்தப் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கலாசார, சமூக, தேசிய, பிராந்திய, தொழில்முறை அல்லது இனக் குழுக்களையும் தாக்குவதை தவிர்க்கும் வகையில் பெயர் சூட்டப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles