பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எரித்துக் கொலை

இலங்கை பிரஜை ஒருவரை சித்திரவதை செய்து, அவரது உடலை எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பாகிஸ்தான், சியால்கொட்டில் பதிவாகியுள்ளதுடன், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சியால்கொட்டிலுள்ள வசிராபாத் வீதியில், தனியார் தொழிற்சாலையொன்றின் ஏற்றுமதி முகாமையாளா் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளாா்.

பிரியந்த குமார என்றழைக்கப்படும் இலங்கையர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக சியால்ன்காகொட் மாவட்ட பொலிஸ் அதிகாரி உமர் சயீத் மாலிக் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது தொழில் நிமித்தம் இவர் சியால்கொட்டில் வசித்து வந்துள்ளாா்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோக்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளதுடன், அந்த வீடியோக்களில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி கோசம் எழுப்பியதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இந்த கொலைக்கான காரணம் அந்த நாட்டு பொலிஸாா் இன்னும் வெளியிடவில்லை என்பதுடன்
இதுதொடர்பில் விரைவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles