மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சாங் சூகி க்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமைக்கு சர்வ்தேச ரீதியாக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாட்லீட் இது முற்று முழுதாக அரசியல் நோக்கம் கொண்ட ஒரு தீர்ப்பு என கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர் ஜோசப் போரேலும் இது முற்று முழுதாக அரசியல் நோக்கம் கொண்ட ஒரு தீர்ப்பு என கூறியுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோனி பிளிங்கனும் இது ஒரு நீதியற்ற தீர்ப்பு மியன்மாரில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சங் சூகியையும் சிறை வைக்கப்பட்டுள்ள ஏனைய ஜனநாயக ரீதியில்தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளையும் விடுதலை செய்யுமாறு மியான்மர் ஆட்சியாளர்களை கோருவதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ்சும் மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
சீன வெளியுறவுத்துறை பேச்சாளர் ஜாவோ லிஜியன் அண்டை நாடான மியான்மரில்ஜனநாயகத்தை தக்க வைப்பதற்கு அனைவரும் அரசியல் யாப்பில் உள்ள படி சட்ட வரையறைக்குட்பட்டு செயற்பட வேண்டுமென கூறியுள்ளார்.
இது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட முடியாத தீர்ப்பு எனவும் விரைவில் மியான்மரில் ஜனநாயகம் மீண்டும் மலர வேண்டுமெனவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.