‘கோப்’, ‘கோபா’ குழுக்களுக்கும் ராஜபக்சக்கள்?

அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரச கணக்குகள் பற்றிய குழு (கோபா) ஆகியவற்றுக்கு தமது விசுவாசிகளை நியமிப்பதற்காகவே நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார் – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.

” கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத், கோபா குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண ஆகியோர் சிறப்பாக செயற்படுகின்றனர். நடுநிலை வகித்து, அரச நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அது தொடர்பில் கேள்விகளை எழுப்புகின்றனர்.

இதனால் அதிருப்தியில் உள்ள ஜனாதிபதி உள்ளிட்ட ராஜபக்சக்கள், இவ்விருவரையும் மாற்றும் நோக்கிலேயே நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தியுள்ளனர்.

புதிய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும்போது, இவ்விரு குழுக்களுக்கும் புதிதாக உறுப்பினர்கள் பெயரிடப்பட வேண்டும். சிலவேளை, ராஜபக்சக்கள்கூட நியமிக்கப்படலாம்.”- என்றும் ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles