கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் உடைப்பு – பாகிஸ்தானில் கொடூரம்

பாகிஸ்தானில் கோவிலுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் திடீரென சாமி சிலைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள நரேன்புரா நகரில் சுவாமி நாராயணன் கோவில் ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த கோவிலில் உள்ளூரை சேர்ந்த இந்துக்கள் வழிபாடு நடத்தி கொண்டிருந்தனர். அப்போது கோவிலுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் திடீரென சாமி சிலைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த இந்துக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து, பொலிஸிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தால் கோபமடைந்த உள்ளூர் இந்து சமூகத்தினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு இந்துக்களின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானில் சமீபகாலமாக இந்து கோவில்கள் அடிக்கடி சூறையாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles