புதிதாகப் பதிவு செய்வதற்காக 160 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அவை தொடர்பான பரிசீலனைகள் நேற்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய அரசியல் கட்சிப் பதிவுக்காக 160 தரப்புகள் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானது.இதனால் புதிய கட்சிகளின் அங்கீகார நடவடிக்கை தடைப்பட்டது.தற்போது தேர்தல் முடிவுற்றமையால் புதிய கட்சிகளின் பதிவைஅங்கீகரிக்கும் பணியை முடிவுறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவற்றின் அடிப்படையில் இதுவரை விண்ணப்பித்த 160 கட்சிகளின் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு 40 கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 120 விண்ணப்பங்களும் மேலும் பரிசீலிக்கப்படுகின்றன.
இவ்வாறு பரிசீலிக்கப்படும் 120 விண்ணப்பங்களினதும் பணியை நிறைவுசெய்ய ஒரு வார காலம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது மேலும் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் எனக் கருதப்படுகின்றது. இலங்கையில் தற்போது 79 கட்சிகள்பதிவில் உள்ள நிலையில் மேலும் அதிககட்சிகள் ஒரே தடவையில் பதிவுக்கு உட்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.