ரயிலுடன் மோதிய கார் பற்றி எரிந்தது – ஒருவர் பலி! (காணொலி)

காங்கேசன்துறையிலிருந்து, கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உத்தரதேவி ரயில் , வத்தள வனவாசல பகுதியில் ரயில்வே கடவையூடாக கடந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போதுபோது கார் தீப்பற்றி எரிந்ததுடன், ரயிலின் முன்பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் காரில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார்.

சம்பவத்தின் போது ரயில் காருடன் மோதியபோது சுமாரை 200 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளதால் தீப்பிடித்துள்ளது. அப்பகுதி மக்கள் இணைந்து தீயினை அணைத்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், இந்த சம்பவத்தால் ரயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

නොසිතූ මොහොතක දුම්රියේ ගැටී ගිනිබත් වූ මොටර් රථය – YouTube

Related Articles

Latest Articles