மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும். தொழில் அமைச்சர் என்ற வகையில் இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவேன் – என்று அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கைவிளக்கஉரைமீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” பொதுத்தேர்தலின்போது பெருந்தோட்ட மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினர். இதன்காரணமாகவே ஐ.தே.கவின் வாக்கு வங்கியை சரிக்ககூடியதாக இருந்தது. எனவே, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். பெருந்தோட்ட தொழிலாளர்களை நாம் மறக்கமாட்டோம்.” – என்றார்.










