உலகெங்கும் வாழும் இந்துக்கள், தைத்திருநாளை வரவேற்பதற்கு தயாராகிவருகின்றனர். எனினும், இலங்கையில் பொருட்களின் விலைகள் எகிறியுள்ளதால் பொங்கல் விற்பனை இம்முறை களைகட்டவில்லை.



நகர்பகுதிகளுக்கு வருகைதந்த மக்கள் பூஜை பொருட்களை மட்டும் அதுவும் குறிப்பிட்டளவு வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர். கடந்த முறை இரு கிலோ அரிசி வாங்கியவர்கள், இம்முறை ஒரு கிலோவே வாங்கி செல்வதை காணமுடிகின்றது.




பொங்கல் பானை உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் சந்தையில் அதிகரித்தே காணப்பட்டது.
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள நகரங்களிலும் மக்கள் இன்று பொருட்களை கொள்வனவு செய்ய வந்திருந்தனர். ஆனால் வியாபாரம் களைகட்டவில்லை.
