‘இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன்’ – ரத்தன தேரர் அறிவிப்பு

” இனிவரும் தேர்தல்களில் நான் போட்டியிடபோவதில்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.

” இனி தேர்தல் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை. மாறாக மக்களை வழிநடத்துவேன். பலமான மக்கள் அமைப்பு கட்டியெழுப்படும்.”- எனவும் அவர் கூறினார்.

கடந்த பொதுத்தேர்தலில் எமது மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கொடி சின்னத்தில், கம்பஹா மாவட்டத்தில் ரத்தன தேரர் போட்டியிட்டார். எனினும், அவர் வெற்றிபெறவில்லை. அக்கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஊடாக சபைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles