மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்துக்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறியவை வருமாறு,
” அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள சில அதிகாரங்கள் அச்சுறுத்தலானவை. தற்போது அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றபோதிலும் சட்டத்தில் உள்ளன.
எனவே, அவற்றில் திருத்தம் மேற்கொள்ளாது மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றோம். மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தல் உட்பட நாட்டுக்கு தேவையான அரசியலமைப்பொன்றை உருவாக்கிய பின்னரே தேர்தல் நடத்தப்படவேண்டும்.
நாட்டில் இரண்டாண்டுகளாக மாகாணசபைகள் இயங்கவில்லை.இதனால் யாருக்கும் எந்தவித இழப்புகளும் இல்லை. எனவே, புதிய அரசியலமைப்பு இயற்றப்படும்வரை தேர்தலை நடத்தாமல் இருப்பதே சிறப்பு.” – என்றார்.










