“ஊடகவியலாளர் சமுதிதவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிக்கின்றோம்”

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்று இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அச்சங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீடுமீது ஆயுதம் தாங்கிய நபர்களால், பெப்ரவரி 14 ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு இவ்வாறு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நபர்களை பாதுகாப்பதே இத்தகைய தாக்குதல்களின் நோக்கம் என்பது தெளிவாகின்றது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ‘கறுப்பு ஜனவரி’ நினைவுகூரப்பட்டு ஒரு மாதம் நிறைவடைவதற்குள் இத்தகையதொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை ஊடக சமூகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் குற்றங்கள் இழைத்தவர்கள் இன்னும் சட்டத்தின்முன் நிறுத்தப்படாமல், சுதந்திரமாக உலா வருவதும் இப்படியான தாக்குதலுக்கு ஆசிர்வாதமாக அமைவதாக எமது சங்கம் கருதுகின்றது.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சமுதித சமரவிக்கிரமவின் ஊடகப் பணி தொடர்பில் ஏதேனும் தரப்பினருக்கு பிரச்சினை இருப்பின், அது தொடர்பில் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ய வேண்டும். அதைவிடுத்து ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்லை எமது சங்கம் வன்மையாகக் கண்டிகின்றது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இலங்கையிலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகைள மேற்கொள்ள எமது சங்கம் தயங்காது.” – என்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles