கொவிட் தொற்றினை சாதாரணமானதாக கருதுவது புத்திசாலித்தனமானதல்ல-ஹேமந்த ஹேரத்

கொவிட் தொற்றினை சாதாரணமானதாக கருதுவது புத்திசாலித்தனமானதல்ல என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்ளாத பல தொற்றாளர்கள் இன்னும் சமூகத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு எவ்வித கொவிட் அறிகுறிகளும் வெளிப்படுத்தப்படாமல் சுகதேகிகளை போன்று காணப்படுவதாகவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பூரண தடுப்பூசியேற்றம் மற்றும் முறையாக சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றல் என்பன கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பினை பெறக்கூடிய ஆகச் சிறந்த வழிமுறைகளாகுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles