மலையகத்தில் தனி வீட்டுத்திட்டத்தையே நாம் முன்னெடுப்போம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“மாடி வீட்டுத் திட்டத்தை கொண்டுவரும் எண்ணம் எமக்கு இல்லை. கொங்றீட் வீடுகளைதான் கொண்டுவரவுள்ளோம்.
அதேபோன்று உதவி ஆசிரியர்களை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆசிரியர் சேவையில் உள்வாங்கியிருக்க வேண்டும். அதனை செய்யாத குறையால்தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் நாம் கூறியவற்றை மக்களுக்கு நிச்சயம் செய்வோம்.” -என்றார்.