தலவாக்கலையில் ‘ஆசிரியர் மரணம்’ – கைதான அறுவரும் பிணையில் விடுவிப்பு

தலவாக்கலை, லோகி தோட்ட சந்தியில் மரக்கிளை முறிந்து விழுந்ததால் ஆசிரியர் ஒருவர் பலியான சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட அறுவரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி அனர்த்தம் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இன்றி, உரிய அனுமதி பெறாமல் மரத்தை வெட்டி அகற்றினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் ஆறு பேரும் இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

வழக்கினை விசாரித்த நீதவான், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 பேரையும் தலா 2 லட்சம் பெறுமதியான சரீரப் பிணை மற்றும் 15 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கௌசல்யா

Related Articles

Latest Articles