உக்ரைனில் போர்க்களம் புகுந்த புதுமனத் தம்பதிகள்

போர் களத்தில் தேன் நிலவை கொண்டாடும் உக்ரைன் புதுமணத்தம்பதிகள்.

Yaryna Arieva , Sviatoslav Fursin ஆகிய இருவருமே ரஷ்யாவுக்கு எதிராக களத்தில் குதித்துள்ள உக்ரைன் புதுமணத்தம்பதிகள்.

இவர்களிருவரும் மே மாதமே திருமணம் செய்ய தீர்மானித்திருந்தனர். ஆனால் திடீரென ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுத்ததால் உடனடியாக திருமணத்தை நிறைவேற்றிக்கொண்டு தமது நாட்டை பாதுகாப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளனர்.

இவர்களிருவரும் camouflage ஜாக்கெட்டுகளை அணிந்தவாறு ரஷ்யா தாக்குதல் தொடுத்துள்ள ஒரு நகரத்தில் தோளில் துப்பாக்கியுடன் தேன் நிலவை கழித்து வருகின்றனர்.ஷ

உக்ரேனின் தேசிய மலர் சூரியகாந்தி, இந்த வசந்த காலத்தில் மக்கள் சூரியகாந்தி,விதைகளை விதைப்பார்கள் இப்போது ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்கின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் எதையும் இழக்கவில்லை, இங்கே ஒருவரும் அழவில்லை, நாங்கள் வெல்வோம் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை, எமது மக்கள் நாட்டைக்காக்க போராடுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என அந்த பெண் CNN இடம் தெரிவித்துள்ளார்.

கணவர் Lviv நகரத்தில் பிறந்தவர், எனது நகர மக்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள்; அவர்கள் சுதந்திரத்திற்காக போராடுகின்றனர் என கூறுகிறார். எனது கணவர் தினமும் யுத்தகளத்தற்கு செல்கிறார்;அவருக்காக காத்திருப்பது கடினமாக உள்ளது என Arieva கூறுகிறார். எமது வாழ்க்கைமுறை முற்றிலும் வித்தியாசமானது; ஆனால் அது தான் வாழ்க்கை, ஒவ்வொருவரும் ஜோக்குகளை கூறி சிரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என அவர் கூறுகிறார்.

சர்வதேச சமூகம் உக்ரேனுக்கு மருத்துவ,உணவு உதவிகளை வழங்குவதுடன் ரஷ்யா மீது மேலதிக தடைகளை விதிக்க வேண்டுமெனவும் அவர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Latest Articles