அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள டால்டனில், கடந்த சனிக்கிழமை மாலை நடந்த விபத்தில் பெற்ற தாயை 3 வயது மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடைபெற்ற தினத்தன்று, டீஜா பென்னட்(Deeja Bennett) 22 வயது என்ற பெண்மணி, ஷாப்பிங் முடித்துவிட்டு தனது மகனை காரின் பின் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, அவர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்ட தயாராகி கொண்டிருந்தார்.
அப்போது அந்த சிறுவன், காரின் பின் இருக்கையில் இருந்த தனது தந்தையின் துப்பாக்கியை கையில் எடுத்து விளையாடியதில் தவறுதலாக குண்டு பாய்ந்தது.
அதில் காரின் முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த பென்னட்டின் முதுகுப்பகுதியில் குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக அருகிலிருந்த சிகாகோ பல்கலைக்கழக மருத்துவ மையத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.