பாதுகாப்புசபை இன்று அவசரமாக கூடுகிறது!

உக்ரைன்மீது ரஷியா போர் தொடுத்தது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்ய அதிபர் புடினை, ஒரு போர் குற்றவாளி என கண்டிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

உக்ரைன் மீது ரஷியா 22-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அல்பேனியா, அயர்லாந்து மற்றும் நார்வே உள்ளிட்ட நாடுகள் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் உக்ரைனில் இன்று மதியம் 3 மணியளவில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Articles

Latest Articles