உக்ரைன் ஜனாதிபதிக்கு நோபல் பரிசு வழங்குமாறு பரிந்துரை

இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு 251 தனிநபர்களும், 92 நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. வருகிற அக்டோபர் மாதம் 3 முதல் 10 ஆம் திகதிக்குள் நோபல் பரிசு அறிவிப்பு வெளியிடப்படும்.

இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளிலும், உலக அமைதிக்கும் சிறந்த பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் நார்வே நோபல் கமிட்டிக்கு பல இந்நாள், முன்னாள் ஐரோப்பிய அரசியல்வாதிகள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வழங்க பரிந்துரைக்க விரும்புவதாகவும், எனவே அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை நடைமுறை காலத்தை வருகிற 31 ஆம் திகதிவரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

Related Articles

Latest Articles