சுழற்சி முறை மின்வெட்டு-குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுகளை கொள்வனவு செய்வதில் கவனம் செலுத்தவும்!

குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது தொடர்ச்சியாக சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு காலாவதியாகும் பொருட்களை பொது மக்களுக்கு விற்பனை செய்த 407 விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனவே,குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles