தியத்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியத்தலாவ நில அளவை காரியாலயத்திற்கு முன்னால் மோட்டார் சைக்கிளும், நோயாளர் காவு வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 17 வயதுடைய மாணவி, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்திய 29 வயதுடைய நபர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியச்லைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (26/03) இடம்பெற்றுள்ளது.
பண்டாரவளை வைத்தியசாலையில் இருந்து நோயாளியை ஏற்றிக்கொண்ட காவு வண்டி தியத்தலாவை வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருக்கையில் அக்காவுவண்டியை உந்துருளி முந்திசெல்ல முற்பட்ட போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. காவு வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா