அதிக விலைக்கு ‘கேஸ்’ விற்பனையா? 1311 இற்கு உடன் முறையிடவும்!

சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடவும் அதிக விலைக்கு ‘லிற்றோ கேஸ்’ விற்பனை செய்யப்படுமானால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு லிற்றோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

1311 என்ற இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி இது தொடர்பில் முறையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அதிக விலைக்கு கேஸ் விற்பனை செய்யும் முகவர்களின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles