பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் இவ்வாரத்தில் ஒரே சமயத்தில் சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி யான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருப்பதாக அறியவருகிறது.
ஏற்கனவே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வடிவம் தயாராகியுள்ளது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரே ரணை வடிவத்தை தயாரிக்கும் வேலைகள் நேற்று
இரவு வரை மும்முரமாக இடம்பெற்றன எனத் தெரிய
வருகிறது.
இந்த இரு நம்பிக்கையில்லாப் பிரேர ணைகளும் ஒன்றாகச் சமர்ப்பிக்கப் பட்டாலும் இரு பிரேரணைகளிலும் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை முன்னதாக எடுக்கக் கோரப்படும் எனத் தெரிகிறது.
அரசுக்கு எதிரான பிரேரணை முன்னதாக எடுக்கப்பட்டு அது நிறைவேற்றப் படுமானால் தற்போதைய அரசு பதவியிழந்து விடும்.
அதன் பின்னர் புதிய அரசு அமைந்து, நாடாளுமன்ற அமர்வு ஆரம்பித்த பின்னரே மீண்டும் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் புதிதாகச் சமர்ப்பித்து விவாதிக்க வேண்டி வரும்.
இரண்டு பிரேரணைகளும் நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடிய பின்னர் இவ்வாரத்தில் ஒன்றாகச் சமர்ப்பிக்கப்படும். அதை சமர்ப்பிக்கும் பிரதான எதிரணித் தரப்பு ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை முதலில் விவாதத்துக்கு எடுக்கக் கோரும் எனத் தெரிகிறது.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு சட்ட ரீதியான வலு எதுவும்இல்லை. தார்மீக ரீதியாக ஜனாதிபதிக்கு எதிரான ஓர் அரசியல் அழுத்தத்தை அது வெளிப்படுத்தும். அவ்வளவுதான். எனினும் ஜனாதிபதியின் மீது நாடாளுமன்றத்துக்கு நம்பிக்கை இல்லை என்ற கருத்தியல் ஆழமாக அதன்மூலம் வெளிப்படுத்தப்படும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன