சஜித் அணியின் மே தின கூட்டத்தை புறக்கணித்த சம்பிக்க

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணியிலும், கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க பங்கேற்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றம் தெரிவான சம்பிக்க ரணவக்க, 43 ஆம் படையணி எனும் அரசியல் இயக்கத்தையும் உருவாக்கினார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே அவர் இந்த நகர்வில் இறங்கினார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் சம்பிக்கவுக்கும், சஜித்துக்கும் இடையில் முரண்பாடு எற்பட்டது.

இந்நிலையிலேயே அவர் மே தினத்தையும் புறக்கணித்துள்ளார்.

Related Articles

Latest Articles