இராஜாங்க அமைச்சுகள் இல்லை?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை 20 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 20 அமைச்சர்களைக் கொண்டதாக புதிய அமைச்சரவை அமையும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கு மேலதிகமாக அதிகளவு எண்ணிக்கையிலான நிறுவனங்களைக் கொண்ட அமைச்சுக்களுக்கு  மாத்திரம் பிரதியமைச்சர்களைநியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதா இல்லையா என்பது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டு வரும் நிலையில் அதற்கான இறுதித் தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதற்கு முன்பதாக அமைச்சரவை நியமிக்கப்பட்டு அமைச்சர்களுக்கான சத்தியப் பிரமாணம் வழங்கப்படும் என்றும், எனினும் அமைச்சர்களுக்கான விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கு இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

Related Articles

Latest Articles