அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமூலம் மற்றும் மாகாணசபை முறைமை ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு, கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.
மாகாணசபை முறைமை நீக்கப்படவேண்டும் என இராஜாங்க அமைச்சரால் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என சிங்கள தேசிய நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சந்திப்பு இவ்வாரம் நடைபெறும் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாணசபை முறைமை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இற்றைவரை அப்பொறிமுறை ஊடாக மக்களுக்கு ஆற்றப்பட்டுள்ள சேவைகள் தொடர்பில் விரிவானதொரு அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகர பணிப்புரை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந்திய தூதரகத்திடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டமூலத்தின் பிரகாரமே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது.