எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்களும் பாடசாலை மாணவர்களும் இரண்டு வார காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரச நிறுவனங்களை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான உரியநடைமுறைகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை அரச நிர்வாக அமைச்சு வெளியிடும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை இரண்டு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய சேவைகள் வழமைபோல இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
