எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்குபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமது கடமை எல்லை மீறி செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகத்தில் பொலிஸார் ஈடுபடாத காரண த்தினால் பொலிஸாருடன் மோதலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறுஅனைத்து மக்களிடமும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதே வேளை குறைந்த பட்ச பலத்தை பிரயோகிக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முல்லைதீவு ,அரநாயக்க,குருணாகல்,அதுருகிரிய உட்பட நாட்டின் பல பகுதிகளில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக அறிய வருகிறது.இதில் பாதுகாப்பு தரப்பினரும் பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.










