பலாங்கொடை பிரதேசத்தில் அரச வேலைத்தளம் ஒன்றிலிருந்து 1500 லீற்றர் டீசல் திருடப்பட்டுள்ளது. இதைத் திருடிய நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்தளத்திலிருந்தே இந்த டீசல் திருடப்பட்டுள்ளது. பலாங்கொடைப் பொலிஸ் நிலையத்தில் இதுபற்றி முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் இந்நபரைக் கைதுசெய்தனர்.
கைதானவரிடமிருந்து, 600 லீற்றர் டீசலும் கைப்பற்றப்பட்டது. இவர்மீது, வழக்குத் தொடுத்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
