மண்ணெண்ணெய் விலையும் விரைவில் அதிகரிக்கப்படும் – என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” பெருமளவான பஸ்கள் இன்று மண்ணெண்ணெய்யில் ஓடுகின்றன. ஆனால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. பஸ் உரிமையாளர்களே மண்ணெண்ணெய் சேகரித்து வருகின்றனர். எனவே, மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்கப்படும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










