” மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். நாட்டு நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும்.” – என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச, அவ்வாறு எரிபொருளை கொள்வனவு செய்தால், அமைச்சு பதவியை துறந்து செல்ல தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் எதிரணிகள், அரசியல் நடத்துகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.










