நாட்டு மக்களுக்கு எரிபொருளை வழங்கமுடியாமல் திண்டாடும் எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் – முன்னிலை சோஷலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மக்களிடம் மன்னிப்பு கோருவதால் எவ்வித பயனும் இல்லை என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என மேற்படி கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
அத்துடன், தேசிய வளங்களை விற்பனை செய்வதே அரசின் நோக்கமாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.










