மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாததால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர்.
குறிப்பாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் மாதாந்தம் நடைபெறும் கிளினிக்கு நோயாளிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தோட்டப்பகுதிகளில் இருந்து நகர் பகுதிகளுக்கு செல்ல காத்திருந்தவர்களுக்கும் சர்ச்சை ஏற்பட்டது.
முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் தனியார் பேருந்துகள் இயங்க டீசல், பெற்றோல் இல்லை. அரச பஸ்களும் உரிய வகையில் சேவையில் இல்லை.
செ.தி. பெருமாள்










