ஆஸி. செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கைது!

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்புக்கு  மேற்கு கடற்பரப்பில் வைத்தே  34 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 7 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆட்கடத்தல் காரர்கள் ஐவருடம் உள்ளடங்குகின்றனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே, இவ்வாறு  சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக ஆஸி .செல்ல முற்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் ஆரம்பக்கட்ட விசாரணையின் பின்னர், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வருடத்தில் கடந்துள்ள 6 மாத கால பகுதிக்குள் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட 400 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles