ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்கள் வசம்! உக்கிரமடைகிறது போராட்டம்!!

ஜனாதிபதி மாளிகை, போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. சிலர் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.

போராட்டக்காரர்களை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். எனினும், வீதித்தடைகளை உடைத்து, போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றனர்.

இதன்போது ஏற்பட்ட பதற்ற நிலையில் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேவேளை, போராட்டத்துக்கு இராணுவ சிப்பாய் ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles