புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது.
அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதன்பின்னரே முதல் அமைச்சரவைக் கூட்டமும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நடப்பு விவகாரங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. அமைச்சரவை பத்திரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
