முதன்முதலாகக் காணப்பட்டதாக நம்பப்படும் விண்மீன் மண்டலம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவற்றை விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்துள்ள பிரபஞ்சத்தின் புகைப்படங்கள் கோடிகாட்டியுள்ளன.
அதன்படி ஏறத்தாழ 13.5 பில்லியன் ஆண்டுக்கு முந்திய பிரபஞ்சத் தொகுப்பின் நட்சத்திரங்கள், விண்மீன் மண்டலங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. க்ளாஸ்- 13 என்றழைக்கப்படும் இந்த விண்மீன் மண்டலம் ஏறத்தாழ 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு வித்திட்டதாக நம்பப்படும் பெருவெடிப்பு என்ற நிகழ்வுக்குப் பின் இந்த விண்மீன் மண்டலம் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு நெடுந்தொலைவில் மிகப் பழைமையானதாகக் கருதப்பட்ட விண்மீன் மண்டலத்தைக் காட்டிலும் இந்த மண்டலம் 100 மில்லியன் ஆண்டுகள் பழைமையானது.
நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்துள்ள பிரபஞ்சத்தின் புகைப்படங்கள் வெளியான ஒரு வாரத்துக்குள் இது தெரியவந்துள்ளது.
இருந்தபோதிலும், கண்டுபிடிப்புகள் தொடர்பில் கருத்துரைக்க இன்னும் காலமுள்ளதாக ஆய்வு நிறுவனம் கூறியது.
