நாளை ஆகஸ்ட் 09 – தேசிய எதிர்ப்பு தினம் பிரகடனம்! நாடாளுமன்றை கலைக்குமாறும் வலியுறுத்து!!

இலங்கையில் நாளை (09) தேசிய எதிர்ப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயக போராட்டக்காரர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்தே இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி நாளை பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்களும், வெகுஜன அமைப்புகளும் இணைந்து, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் அறவழி போராட்டத்தை நடத்தவுள்ளன.

காலி முகத்திடல் போராட்டக்களம் உட்பட நாட்டில் பல பகுதிகளிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles