ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலி

மொரட்டுமுல்லை வில்லோரவத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் நேற்று (ஆகஸ்ட் 9) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாடசாலை இடைவேளையின் போது பல மாணவர்களுடன் குறித்த பாடசாலை மாணவர் இரும்பு ஊஞ்சலில் சவாரி செய்த போது அதிலிருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தை 14 வயதுடையவர் என்பதுடன் மொரட்டுவ, கீழ் இபித்த பிரதேசத்தில் வசித்து வந்தவர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles