குருவி செய்தித் தளத்தின் ஸ்தாபக உறுப்பினரும், ஆசிரியர் பீட அங்கத்தவருமான கிருஸ்ணசாமி ஹரேந்திரன், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஆசிரியர் பீடத்தில் இருந்து விலகியுள்ளார்.
ஹரேந்திரனின் பங்களிப்பிற்கும், ஆதரவிற்கும் குருவி ஆசிரியர் பீடம் சார்பாகவும், பணியாளர்கள் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மலையக மக்கள் நலன்சார் பணிகளையும், செய்திகளையும் குருவி தளம் தொடர்ந்து வழங்கும் என்பதையும் குருவி ஆசிரியர் பீடம் அறிவித்துக் கொள்கிறது.
அத்துடன், இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புக்களை வழங்குவதற்காகவும் குருவி பணியாற்றும் என்பதையும் அறியத்தருகிறோம்.
குருவி ஆசிரியர் பீடம்