கொழும்பு, காலிமுகத்திடலில் நேற்று பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு எஞ்சியிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்ட நிலையில், அங்கு வளர்க்கப்பட்ட கஞ்சா செடியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கிருந்த கூடாரமொன்று போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனவும், அந்த கூடாரத்தில் இருந்து போதைப்பொருள் பயன்படுத்தப்பட்ட மாத்திரை அட்டைகளும் கைப்பற்றப்பட்டன.